search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
    X
    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்ட விவகாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

    ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகள் கணிசமாக குறைந்துள்ளது என்றும் யூனியன் பிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
    1990ம் ஆண்டு காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்தைத் தடுக்க தவறியதற்கு பாஜகவும் பொறுப்பேற்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    மாநிலங்களவையில் ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட் 2022- 2023 மீதான விவாதத்திற்கு நிதியமசை்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்

    காஷ்மீர் பண்டிட்டுகள் பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்ட பின்னர் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது 1990-ம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசை பாஜக ஆதரித்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

    இதுதொடர்பான வாதத்தின்போது பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    நான் உண்மையை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான அரசு 1986-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜம்முவில் ஆட்சியில் இருந்தது.

    1990-ம் ஆண்டு ஜனவரி 20ல் ஆளுநராக ஜக்மோகன் இருந்தார். அப்போதைய முதல்வர் ஃபரூக் அப்துல்லா ராஜினாமா செய்த பிறகு ஆளுநர் ஸ்ரீநகருக்கு சென்றார்.

    1989-ம் ஆண்டு ஜூலையில் ஆளுநர் ஜக்மோகன் பயங்கரவாத ஆபத்து குறித்து அப்போதைய மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் கூட காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் மீது கவனம் செலுத்துகின்றன. பட்ஜெட்டில் கவனம் செலுத்தவில்லை.

    காஷ்மீர் விவகாரத்தை காங்கிரஸ் சர்வதேசமயமாக்குகிறது. இது அடிப்படையில் ஒரு இந்தியப் பிரச்சினை. நாங்கள் அதைக் கையாண்டிருக்கலாம். நாங்கள் அதைக் கையாளுகிறோம். இப்போது வித்தியாசத்தைக் காட்டுகிறோம்.

    ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகள் கணிசமாக குறைந்துள்ளது. யூனியன் பிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. மைக்ரோவேவ் ஓவனில் குழந்தையின் சடலம்- தாய் கைது
    Next Story
    ×