search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    யோகேஷ் வர்மா
    X
    யோகேஷ் வர்மா

    வாக்குப் பதிவு எந்திரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் சமாஜ்வாடி- பைனாகுலர் மூலம் பார்வையிடும் வேட்பாளர்

    ஏழாவது சுற்று வாக்குப்பதிவுக்குப் பிறகு வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன.
    மீரட்:

    403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாளை மறுநாள் வாக்குப் எண்ணிக்கை நடைபெறுகிறது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணிக்கு  சமாஜ்வாடி கட்சி ஆட்களை நியமித்துள்ளது. மீரட் மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபூர் தொகுதி வேட்பாளர் யோகேஷ் வர்மா, பைனாகுலர் மூலம் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறையை பார்வையிடும் வீடியோ வெளியாகி உள்ளது
    இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: 

    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஆட்கள் நடமாட்டம் குறித்து காண்காணிக்குமாறு எங்கள் கட்சி (சமாஜ்வாடி) தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

    நாங்கள்  8 மணி நேரம் மூன்று ஷிப்டுகளில் வேலை செய்கிறோம். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.அகிலேஷ் யாதவ் முதலமைச்சராவார். நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உத்தர பிரதேசத்தில் ஏழாவது சுற்று வாக்குப் பதிவுக்குப் பிறகு வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக அங்கு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் தெரிவித்துள்ளன. அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×