search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் ஆகிறார் பிரியங்கா?

    கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும்போது புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். மூத்த தலைவர்கள் சமரசம் செய்தும் அதை ராகுல்காந்தி ஏற்கவில்லை.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தியை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் ராகுல்காந்தி இருந்தபோது அவர் நடந்து கொண்ட விதத்தை சில மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. மேலும் ராகுல்காந்தியின் பிடிவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ராகுல்காந்தி கட்சி தலைவர் பதவியை ஏற்கும் வாய்ப்பு குறைக்கப்பட்டது. அவருக்கு பதிலாக பிரியங்கா காந்தி பெயர் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு பேசப்படுகிறது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அரசியல் களம் கண்ட பிரியங்காவுக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு உத்தரபிரதேச மாநில பொறுப்பும் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் பா.ஜனதா ஆளும் உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    தற்போது சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் பல்வேறு போராட்டங்களையும் முன்நின்று நடத்தினார். இதனால் காங்கிரசின் நிரந்தர தலைவர் பதவிக்கு ராகுலுக்கு பதில் பிரியங்கா காந்தி பேசப்படுகிறார்.

    இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில் கூறும்போது, ‘பிரதமர் பதவிக்கு காங்கிரசின் துருப்பு சீட்டாக பிரியங்கா உள்ளார். ராகுல் மீண்டும் தலைவராக வேண்டும் என்ற நிலையில் இருந்து தற்போது பிரியங்கா பக்கம் திரும்பியுள்ளது.

    ராகுல் தலைவரானாலும், ஆகாவிட்டாலும் காங்கிரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். இதை தடுத்து கட்சியை காப்பாற்ற பிரியங்காவால் மட்டுமே முடியும் என்றனர்.

    கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும்போது புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×