என் மலர்
இந்தியா

பா.ஜ.க.வில் இணைந்த அஜய் ராவத்
பிபின் ராவத் சகோதரர் விஜய் ராவத் பா.ஜ.க.வில் இணைந்தார்
பிரதமர் மோடியின் தொலைநோக்கும் சிந்தனையும் எதிர்காலம் சார்ந்தது என விஜய் ராவத் தெரிவித்தார்.
உத்தரகாண்ட்:
உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இளைய சகோதரரும், ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான கர்னல் விஜய் ராவத், உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமியின் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது தந்தை ஓய்வுபெற்ற பிறகு பா.ஜ.க.வில் இருந்தார். இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பா.ஜ.க.வில் இணைவதற்காக நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். பிரதமர் மோடியின் தொலைநோக்கும் சிந்தனையும் மிகவும் புத்திசாலித்தனமானது மற்றும் எதிர்காலம் சார்ந்தது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...உ.பி. சட்டசபை தேர்தல்- அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் பாஜக கூட்டணி
Next Story






