search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜக கூட்டணி தலைவர்கள்
    X
    பாஜக கூட்டணி தலைவர்கள்

    உ.பி. சட்டசபை தேர்தல்- அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் பாஜக கூட்டணி

    பா.ஜ.க கூட்டணி 403 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜே.பி. நட்டா கூறினார்.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. பா.ஜ.க. விலிருந்து மூன்று அமைச்சர்கள் மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறி இருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்த நிலையில், டெல்லியில் பா.ஜ.க மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜே.பி.நட்டா, உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அப்னா தளம் மற்றும் நிஷாத் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவித்தார். பா.ஜ.க கூட்டணி 403 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும்,  கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

    மத்திய மந்திரியும் அப்னா தளத்தின் தலைவருமான அனுப்ரியா படேல், நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) நலன்களுக்காக பாடுபடுவதாக பாராட்டினர். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பெரும் பகுதியினரின் உரிமைகளை எதிர்க்கட்சியினர் மறுப்பதாக குற்றம்சாட்டினர்.
    Next Story
    ×