என் மலர்
இந்தியா

காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் குண்டு வீச்சு - காவல்துறை அதிகாரி உள்பட 2 பேர் படுகாயம்
போலீசாரின் ரோந்து வாகனம் மீது கையெறி குண்டு வீசிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரப் கடால் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் சென்ற ரோந்து வாகனம் மீது கையெறி குண்டுகளை வீசினர். இதில் மெஹ்ராஜ் அகமது என்ற காவல்துறை அதிகாரி மற்றும் சர்தாஜ் அகமது பட் என்ற நபரும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி வழக்கு பதிவு செய்து சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
போலீசாரின் ரோந்து வாகனம் மீது கையெறி குண்டு வீசிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story