என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜேபி நட்டா
    X
    ஜேபி நட்டா

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுக்கு கொரோனா

    தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்ய ஜே.பி நட்டா வலியுறுத்தியுள்ளார்.
    புது டெல்லி:

    இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா 3-வது அலைக்கு இன்றைய நிலவரப்படி புதிதாக 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா 3-வது அலைக்கு பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 

    இந்நிலையில் தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

    தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்ய ஜே.பி நட்டா வலியுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×