என் மலர்
இந்தியா

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷன்
ஒமைக்ரான் பரவலை தடுக்க மாவட்ட அளவில் நடவடிக்கை - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
டெல்டா வைரஸை விட 3 மடங்கு வேகமாக ஒமைக்ரான் பரவக் கூடியது என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
புதுடெல்லி
தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்தியாவில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 202 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளது. 77 பேர் சிகிச்சைக்கு பின்னர் மீண்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மற்றும் டில்லியில் தலா 54 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷன் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒமைக்ரான், டெல்டா தொற்றை விட 3 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் இன்னும் அதிக தரவு பகுப்பாய்வுகள் தேவை. கடுமையான மற்றும் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கை மாவட்ட அளவில் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்றுவரை 138 கோடியே 89 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் இரவு 7 மணிவரை 51 லட்சத்து 30 ஆயிரத்து 949 கொரோனா தடுப்பூசி டோஸ் தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
Next Story






