search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தடுப்பூசி
    X
    தடுப்பூசி

    நிபுணர் குழு பரிந்துரைத்தால் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்- மத்திய அரசு முடிவு

    2 டோஸ் தடுப்பூசி ஒமைக்ரானை முழுமையாக எதிர்க்கும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை என்றும் ஒமைக்ரானை எதிர்கொள்ள பூஸ்டர் ஊசி அவசியம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    கொரோனா வைரசின் புதிய உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்பதால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. ஒமைக்ரானை ‘கவலைக் குரிய உருமாற்றம்’ என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் ஒமைக்ரான் வைரசின் அபாயத்தை தடுக்க இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் போட்டுக் கொண்ட 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கொரோனா உருமாற்றத்தை கண்காணிக்கும் இந்திய கூட்டமைப்பு கூறி உள்ளது.

    2 டோஸ் தடுப்பூசி ஒமைக்ரானை முழுமையாக எதிர்க்கும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை என்றும் ஒமைக்ரானை எதிர்கொள்ள பூஸ்டர் ஊசி அவசியம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

     

    ஒமைக்ரான் வைரஸ்

    இந்த நிலையில் நிபுணர் குழு பரிந்துரைத்தால் பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் அல்லது குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் குறித்த எந்த ஒரு முடிவும் இந்த வி‌ஷயத்தை கவனிக்கும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கண்டிப்பாக எடுக்கப்படும்.

    இந்த முடிவை அவசரப்படுத்தவோ, அரசியலாக்கவோ முடியாது. இது தூய அறிவியல் மற்றும் அறிவின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

    தொற்று நோயின் தொடக்கத்தில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தினோம். கடந்த 2 ஆண்டுகளில் துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒருவர் தடுப்பூசியில் ஆராய்ச்சி செய்தால் ஒப்புதல் பெற 3 வருடங்கள் ஆகும். நாங்கள் அந்த விதிகளை அகற்றினோம். ஆராய்ச்சிக்கு பிறகு ஒரு வருடத்திற்குள் தடுப்பூசியை பெற்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 38 நாடுகளில் பரவியுள்ளது

    Next Story
    ×