என் மலர்
செய்திகள்

புதிய வகை கொரோனா
கர்நாடகாவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று
நவம்பர் 1 முதல் 26-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் இருந்து 94 பேர் வருகை தந்துள்ளனர் என பெங்களூரு ஊரக துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது. ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இதற்கிடையே, இந்தியாவிலும் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கண்காணிப்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பரிசோதனைகளின் முடிவிலேயே அது புதிய வகை கொரோனாவா, இல்லையா என்பது தெரியவரும். இதனால் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்...மிகவும் ஆபத்தானது உருமாறிய கொரோனா வைரஸ் - ராகுல் காந்தி எச்சரிக்கை
Next Story