search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் 2வது நாளாக குறைந்த கொரோனா தொற்று- தினசரி பலி உயர்வு

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி இதுவரை 56.74 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோன பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,870 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 451 ஆக உயர்ந்தது.

    நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 11,196 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழ்நாட்டில் 1,630, மிசோரத்தில் 1,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் நிலவரப்படி ஒருநாள் பலி எண்ணிக்கை 179 ஆக இருந்த நிலையில் நேற்று கேரளாவில் 149, மகாராஷ்டிராவில் 60 பேர் உள்பட மேலும் 378 பேர் இறந்துள்ளளனர்.

    இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,47,751 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,38,962 பேர் அடங்குவர்.

    நேற்றைய பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த வகையில் நேற்று 28,178 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 86 ஆயிரத்து 180 ஆக உயர்ந்தது.

    தற்போது 2,82,520 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 1,49,931 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கோப்புப்படம்

    நாடு முழுவதும் நேற்று 54,13,332 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 87.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி இதுவரை 56.74 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதில் நேற்று மட்டும் 15,04,713 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×