search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்
    X
    துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்

    கொரோனா பாதிப்பு- தனிமைப்படுத்திக்கொண்ட டெல்லி துணைநிலை ஆளுநர்

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வீட்டில் இருந்தே பணிகளை கவனிப்பதாக டெல்லி துணைநிலை ஆளுநர் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, சிகிச்சை பெறலாம் என டாக்டர்கள் கூறி உள்ளனர். அதன்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

    தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். 

    வீட்டில் இருந்தபடியே வழக்கமான பணிகளை கவனிப்பதாகவும், டெல்லியில் கொரோனா நிலவரத்தை கணிகாணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×