என் மலர்
செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த மோடி கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் - உ.பி. காங்கிரஸ் பிரமுகர் சொல்கிறார்
மக்களுக்கு நம்பிக்கை உருவாக்கும் வகையில், முதல் நாளிலேயே பிரதமர் மோடி தனக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என உ.பி. காங். முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப் மாத்தூர் கூறியுள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பிரதீப் மாத்தூர் நேற்று லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங்கி வருகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கை உருவாக்கும் வகையில், முதல் நாளிலேயே பிரதமர் மோடி தனக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அமெரிக்க ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் போல், மோடியும் தடுப்பூசி போட்டுக்கொண்டு முன்னுதாரணமாக இருந்திருக்கலாம்.
50 நாட்களுக்கு மேல் போராடும் விவசாயிகளை பார்த்தால் கல் நெஞ்சக்காரருக்கும் இதயம் உருகும். ஆனால், பா.ஜனதா கடுமை காட்டி வருகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு நடக்காதபட்சத்தில், பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து விவசாயிகள் கீழே இறக்குவார்கள். ராமரால் கூட பா.ஜனதாவை காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story