என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
8-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி - தொடரும் விவசாயிகள் போராட்டம்
Byமாலை மலர்8 Jan 2021 5:36 PM IST (Updated: 8 Jan 2021 5:36 PM IST)
விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இன்று நடைபெற்ற 8-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் இன்று 44-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் இடையே 7 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது.
ஏற்கனவே நடந்த அனைத்துகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துருந்தன. விவசாய சட்டங்களை திரும்பபெற வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு பிடிவாதமாக தெரிவித்துள்ளது.
மாறாக சட்டத்தில் உள பிரிவு வாரியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.
ஆனால், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் பிடிவாதமாக உள்ளது. மேலும், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பு நடத்துவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையே 8-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று வருகிறது.
டெல்லியில் விக்யான் பவன் அரங்கில் நடைபெற்றும் இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் மற்றும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். விவசாய சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், 2 மணி நேரம் நீடித்த இன்றைய பேச்சுவார்த்தையும் எந்த வித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விவசாய சங்கங்களும், சட்டங்களை திரும்பப்பெறப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசும் உறுதியாக இருந்ததால் 8-ம் கட்டமாக நடந்த இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
இரு தரப்பும் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 15-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X