என் மலர்

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.


    திறந்தவெளி மைதானம் ஒன்றில் நூற்றுக்கணக்கான கூடாரங்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகின் மிகப்பெரிய போராட்டம் என கூறி வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது டெல்லி எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2013 கும்ப மேளா நிகழ்வில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் தற்போதைய விவசாயிகள் போராட்டம் உலகின் பெரிய போராட்டம் என்பதை இதுவரை நிரூபிக்கும் தகவல் எதுவும் வெளியாரவில்லை.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    புகைப்படத்தை இணையத்தில் தேடிய போது, இதே புகைப்படம் கொண்ட வலைதள பதிவு காணக்கிடைத்தது. அதில் இந்த புகைப்படம் 2013, பிப்ரவரி 8 ஆம் தேதி எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இது டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×