என் மலர்

  செய்திகள்

  மனோகர்லால் கட்டார்
  X
  மனோகர்லால் கட்டார்

  கொரோனா முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி - அரியானா முதல்-மந்திரி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தடுப்பூசி தயாரானதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு முதலில் போடப்படும் என்று அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.
  சண்டிகர்:

  கொரோனா தடுப்பூசிக்கான மூன்றாவது கட்ட பரிசோதனை நடைபெற்றுவருவதாகவும், தடுப்பூசி தயாரானதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு முதலில் போடப்படும் என்றும் அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.

  குருகிராமில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்து கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்திருக்கிறது.

  ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக்கொள்வதுடன், தமது குடும்பத்தினர், தெரிந்தவர்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் மனோகர்லால் கட்டார்.
  Next Story
  ×