என் மலர்

  செய்திகள்

  ஜிம்
  X
  ஜிம்

  மகாராஷ்டிராவில் தசரா முதல் ஜிம்கள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிராவில் தசரா பண்டிகை முதல் ஜிம்கள், உடற்பயிற்சிக் கூடங்களை பாதுகாப்பு விதிமுறைகளுடன் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
  மும்பை: 

  இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. நோய் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன.

  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 14,238 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,58,6060 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் கொரோனா மீட்பு விகிதம் 85.65 சதவீதமாக உள்ளது. தற்போது 1,85,270 பேர் சிகிச்சையில் உள்ளனர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

  இதற்கிடையே, மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஊரடங்கு தளர்வுகளை ஒட்டி, பல்வேறு சேவைகள் மற்றும் தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 

  இந்நிலையில், மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்தார்.

  அதன்பின், கொரோனாவை தடுப்பதற்கான நடைமுறைகளுடன் உடற்பயிற்சி மையங்கள் செயல்பட அரசு அனுமதி அளிக்கிறது.

  தசரா பண்டிகை முதல் ஜிம்கள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்தது.

  இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உடற்பயிற்சி வளாகங்கள், கருவிகளை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஜிம்மிற்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவற்றையும் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
  Next Story
  ×