என் மலர்

  செய்திகள்

  முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தா
  X
  முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தா

  முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறிய மாணவி ‘பல்டி’

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தா மீது எந்த குற்றச்சாட்டும் தான் கூறவில்லை என்று கோர்ட்டில் ஆஜரான மாணவி, திடீரென ‘பல்டி’ அடித்தார்.
  லக்னோ:

  பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தா, உத்தரபிரதேசத்தில் தனது ஆசிரமம் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஷாஜகான்பூரில் உள்ள அவரது சட்டக்கல்லூரியில் படித்து வந்த 23 வயது மாணவி ஒருவர், கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் பலாத்கார புகார் கூறினார்.

  அதன்பேரில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சின்மயானந்தா கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். லக்னோவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. வழக்குகளுக்கான தனிக்கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

  நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜரான அந்த மாணவி, திடீரென ‘பல்டி’ அடித்தார். அரசுத்தரப்பு கூறுவது போல், சின்மயானந்தா மீது எந்த குற்றச்சாட்டும் தான் கூறவில்லை என்று அவர் கூறினார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அரசுத்தரப்பு, அம்மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு மனு தாக்கல் செய்தது. அம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
  Next Story
  ×