என் மலர்
செய்திகள்

வாரணாசியில் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
கொரோனாவால் வாய்ப்பை இழந்தவர்களுக்கு இன்று நீட் தேர்வு -2 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு இன்று நடத்தப்படும் தேர்வில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
புதுடெல்லி:
கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
அவர்களுக்கு அக்டோபர் 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி கொரோனாவால் தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. 5 மணி வரை தேர்வு நடைபெறும். இதில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர்.
Next Story