என் மலர்

  செய்திகள்

  தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
  X
  தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

  ராம்விலாஸ் பஸ்வான் மறைவு- தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
  ஐதராபாத்:

  டெல்லி ஆஸ்பத்திரியில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

  ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த மத்திய அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×