என் மலர்
செய்திகள்

போலீசாரால் கைது செய்யப்பட்டோர்
ஜம்மு-காஷ்மீர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கைது
ஜம்மு காஷ்மீர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் ஐ.எஸ். (ஐ.எஸ்.ஜே.கே) அமைப்புடன் இணைக்கப்பட்ட பயங்கரவாத குழுவை சேர்ந்த 5 செயற்பாட்டாளர்களை பந்திப்போரா மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர்..
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பந்திப்போராவின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நகரைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதானவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேட்ரிக்ஸ் தாள்கள், ஜம்மு காஷ்மீர் ஐஎஸ் அமைப்பு கொடிகள் மற்றும் வெடிமருந்துகள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேர இளைஞர்களை ஊக்குவித்து வந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன
Next Story