என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தேவேந்திர பட்னாவிஸ் தானேயில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்த காட்சி.
மும்பை பெருநகர பகுதியில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது: தேவேந்திர பட்னாவிஸ்
By
மாலை மலர்7 July 2020 3:13 AM GMT (Updated: 7 July 2020 3:13 AM GMT)

மும்பை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை :
கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் தலைநகர் மும்பையை அடுத்து தானே மாவட்டத்தில் இந்த வைரசால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில், பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தானே மாவட்டத்தின் தானே, நவிமும்பை, கல்யாண்-டோம்பிவிலி, மிராபயந்தர், உல்லாஸ்நகர், ராய்காட் மாவட்டத்தின் பன்வெல் ஆகிய இடங்களில் கடந்த 3 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து கொரோனா நிலைமை குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மும்பை பெருநகர எல்கைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது. இங்கு கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். பரிசோதனை செய்த ஒரு நாளில் முடிவை தெரிவிக்க வேண்டும். 3 நாள் சுற்றுப்பயணத்தின் போது, கொரோனா நிலைமை தொடர்பாக அறிந்தவற்றை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிற்கு அறிக்கையாக சமர்ப்பிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×