என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    மகாராஷ்டிராவில் இன்று 3752 பேருக்கு கொரோனா: 100 பேர் பலி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,20,504 ஆக அதிகரித்துள்ளது.
    மகாராஷ்டிராவில் நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

    இன்று 3752 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,20,504 ஆக அதிகரித்துள்ளது. இன்று 100  பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 5,751 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று ஒரே நாளில் 1672 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,838 ஆக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×