search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    லடாக் மோதலில் உயிரிழந்த மேற்கு வங்க வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு - மம்தா பானர்ஜி

    சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்
    கொல்கத்தா:

    லடாக் எல்லையில் சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் 2 பேர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இந்த நிலையில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “ லடாக் எல்லையில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த நமது மாநிலத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர் “நமது தேசத்தை காக்க அவர்கள் செய்த இவ்வளவு பெரிய தியாகத்தை எதுவும் ஈடு செய்ய முடியாது. இந்த கடினமான நேரத்தில் நமது மண்ணின் அடுத்த மகன்களுடன் நாம் துணை நிற்போம்“ என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×