search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்துறை மந்திரி அமித் ஷா, பிரதமர் மோடி (கோப்பு படம்)
    X
    உள்துறை மந்திரி அமித் ஷா, பிரதமர் மோடி (கோப்பு படம்)

    கொரோனா தடுப்பு நடவடிக்கை- அமித் ஷாவுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை

    நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நான்காவது ஊரடங்கு காலகட்டத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்கள் பணியை தொடங்கி உள்ளன. உள்நாட்டு விமான சேவை, ரெயில் சேவை தொடங்கி உள்ளது. அதேசமயம், கொரோனா தொற்று எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடி தனது இல்லத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது தளர்த்தலாமா? என்பது குறித்து வியாழக்கிழமை அனைத்து மாநில முதல்வர்களுடன், அமித் ஷா ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×