search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான சேவை
    X
    விமான சேவை

    ஜூன் முதல் வாரத்தில் விமான சேவை தொடங்க வாய்ப்பு- 10 நாட்களுக்கு முன்னர் முன்பதிவுக்கு அனுமதி

    கொரோனா தாக்கத்தால் நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக, 10 நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி செலுத்தப்படுகிறது. ஊரடங்கு காலம் முடிவடைந்து, மே 3ம்தேதிக்கு பிறகு உள்நாட்டு விமான சேவையை படிப்படியாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் விமானங்களை மீண்டும் இயக்குவது தொடர்பாக விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகளுக்கு 10 நாட்களுக்கு முன்னர் தகவல் தெரிவிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரத்தைப் பொருத்து விமான சேவையை மீண்டும் தொடங்குவது முடிவு செய்யப்படும். ஆனால் ஜூன் முதல் வாரத்தில் விமான சேவை தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக விமான போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

    உள்நாட்டு சேவைகளை மட்டும் இப்போதைக்கு தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள். வெளிநாட்டு விமானங்களை இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. 

    விமான நிறுவனங்கள் முன்பதிவுகளை மீண்டும் தொடங்க 10 நாட்கள் போதுமானது என்று அரசு கருதுகிறது. அதேசமயம் நெட்வொர்க் ஒன்றிணைப்பு, பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்துதல், போதிய முன்பதிவுகளை உருவாக்குதல் போன்ற காரணங்களுக்காக குறைந்தது 15 நாட்கள் தேவைப்படும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு விமான போக்குவரத்து துறை உரிய அறிவிப்பை வெளியிடும்.

    பல்வேறு இடங்களில் மக்கள் சிக்கித் தவிப்பதால், விமானங்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக நகர்ப்பகுதிகளில் மக்கள் அதிக அளவில் சிக்கியுள்ளதால், முன்பதிவுக்கான 10 நாட்களில் முதல் மூன்று நான்கு நாட்கள், அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும். அதன்பிறகு, படிப்படியாக குறையும் என விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

    கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு, விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பினாலும், விமான பயணத்திற்கான தேவை, தனி மனித இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளை பராமரிக்க வேண்டியது அவசியம். இது விமான நிறுவனங்களுக்கு சவாலானதாக இருக்கும்.

    Next Story
    ×