என் மலர்
செய்திகள்

கொரோனா வார்டு
கொரோனா வார்டில் மொபைல் பயன்படுத்தத் தடை: மேற்கு வங்காள அரசு நடவடிக்கை
கொரோனா வார்டில் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று மேற்கு வங்காள அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் நபர்கள் தங்களது உறவினர்களிடமும், நேரத்தை கழிக்கவும் செல்போன்களை பயன்படுத்துகின்றனர்.
அவசர உதவிகளுக்கும் போன் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் கொரோனா வார்டில் மருத்துவர்கள் தவாறாக சித்தரிக்கும் சில வீடியோக்களும் வெளியாகுகின்றன. இதனால் மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘‘மொபைல் போன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடியதற்காக சாத்தியக்கூறுகள் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் போனைத் தொடும்போது அதன் மேற்பகுதியில் வைரஸ் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. இதனால் யாரும் சொல்போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது பாதிக்கப்பட்ட நபர் மற்றும் ஸ்டாஃப் அனைவரும் பொருந்தும்’’ எனத் தெரிவித்துள்ளது.
Next Story






