search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ சங்க நிர்வாகிகளுடன் உரையாடிய உள்துறை மந்திரி அமித் ஷா, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன்
    X
    மருத்துவ சங்க நிர்வாகிகளுடன் உரையாடிய உள்துறை மந்திரி அமித் ஷா, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன்

    உள்துறை மந்திரி உத்தரவாதம்- போராட்டத்தை கைவிட்ட மருத்துவ சங்கம்

    மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா உத்தரவாதம் அளித்ததையடுத்து மருத்துவ சங்கம் தனது போராட்ட அறிவிப்பை திரும்ப பெற்றது.
    புதுடெல்லி:

    கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்வரிசையில் நின்று உயிரைப் பயணம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பணியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால்,  சிலர் மருத்துவர்களின் சேவையை மதிக்காமல் அவர்களை அவமானப்படுத்துவது, அவர்களை தாக்குவதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். 

    மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பபடும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்திருந்தது. 

    மத்திய மந்திரிகளுடன் உரையாடிய மருத்துவ சங்க நிர்வாகிகள்

    இதையடுத்து மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் ஆகியோர் காணொலி மூலம் இன்று உரையாடினர். அப்போது. மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்று கூறிய அமித் ஷா, மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை கைவிட வேண்டும் என கேட்டுக்கொணடார்.

    இதையடுத்து இந்திய மருத்துவ சங்கம் அறிவித்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. உள்துறை மந்திரியுடனான  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை திரும்ப பெற்றதாக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×