என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    பொதுமக்களிடம் 1921 என்ற எண்ணில் இருந்து கொரோனா குறித்து ஆய்வு- மத்திய அரசு முடிவு

    மக்கள் அனைவருக்கும் 1921 என்ற எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு கொடுத்து கொரோனா அறிகுறி பரவுதல் உள்ளிட்ட ஒரு ஆய்வை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேபோல் பல்வேறு விழிப்புணர்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு தற்போது 1921 என்ற அழைப்பு எண்ணை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. மக்கள் அனைவருக்கும் 1921 என்ற எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு கொடுத்து கொரோனா அறிகுறி பரவுதல் உள்ளிட்ட ஒரு ஆய்வை செய்ய முடிவு செய்துள்ளது.

    இதற்காக அனைத்து செல்போன்களுக்கும் 1921 அழைப்பு கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசின் தொலைபேசி எண்ணான 1921-ல் இருந்து அழைப்பு வந்தால் அந்த ஆய்வுக்கு பொதுமக்கள் முழு ஆதரவை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும் வேறு எண்ணில் இருந்து யாரேனும் பொழுது போக்குக்காகவோ வேறு திட்டத்துக்காகவோ அழைப்பு விடுக்கலாம் என்றும் அதுபோன்ற அழைப்புகளில் இருந்து கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    Next Story
    ×