என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சீனாவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி பில் அனுப்பிய ஜெர்மனி?

    கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படுத்தியதாக சீனாவுக்கு ஜெர்மனி சார்பில் ரூ. 10 ஆயிரம் கோடி பில் அனுப்பப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.



    கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படுத்தியதற்காக சீனாவுக்கு ஜெர்மனி சார்பில் ரூ. 10 ஆயிரம் கோடி (130 கோடி யூரோ) பில் அனுப்பப்பட்டு இருப்பதாக தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தி குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சர்ச்சையை ஏற்படுத்தும் வைரல் பதிவுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளை சரிகட்ட ஜெர்மனி சார்பில் சீனாவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி பில் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது, இந்தியாவும் இதே போனறு பீஜிங்கிற்கு ரூ. 25 ஆயிரம் கோடிக்கான பில் ஒன்றை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. 

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், செய்தி தொகுப்பின் தலைப்பில் பிழை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. உண்மையில் செய்தியை வெளியிட்டது ஜெர்மனியை சார்ந்த ப்ளிட் எனும் செய்தித்தாள் ஆகும். உண்மையில் அந்த செய்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜெர்மனியின் பொருளாதாரத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருபதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இத்தனை இழப்புகளுக்கும் சீனா காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ப்ளிட் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து சர்வதேச செய்தி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட்டன. உண்மையில் பொருளாதார இழப்பு பற்றிய தகவல் ஜெர்மனி அரசு சார்பில் வெளியிடப்படவில்லை. வைரல் தகவல்களை தொடர்ந்து செய்தியின் தலைப்பு மாற்றப்பட்டு விட்டது. அந்த வகையில் சீனாவுக்கு ஜெர்மனி சார்பில் பில் எதுவும் அனுப்பப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×