search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்வீடன் அரச தம்பதியருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு
    X
    ஸ்வீடன் அரச தம்பதியருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

    மகாராஷ்டிரா - கவர்னர் மாளிகையில் ஸ்வீடன் அரச தம்பதியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

    மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் ஸ்வீடன் அரச தம்பதியரை கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆகியோர் சந்தித்தனர்.
    மும்பை:

    ஸ்வீடன் நாட்டு மன்னர் 16-ம் கார்ல் கஸ்டப் மற்றும் அரசி சில்வியா 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். டெல்லி வந்த அரச தம்பதிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அரச தம்பதிகள் மரியாதை செலுத்தினர்.

    தலைநகர் டெல்லியில் ஸ்வீடன் அரச தம்பதிகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு ஸ்வீடன் அரச தம்பதிகள் இன்று சென்றனர், அங்குள்ள கவர்னர் மாளிகையில் ஸ்வீடன் அரச தம்பதியரை கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ராஷ்மி தாக்கரே ஆகியோர் சந்தித்தனர்.
    Next Story
    ×