என் மலர்

  செய்திகள்

  வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
  X
  வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

  டெல்லி பள்ளியில் அதிநவீன வருகை பதிவேடு?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் டெல்லி பள்ளியில் அதிநவீன வருகை பதிவேடு பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  டெல்லி பள்ளி ஒன்றில் மாணவர்களின் அடையாள அட்டையை கொண்டு வருகை பதிவு செய்யப்படுவதாக அசத்தல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவின் படி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசாங்கம் பள்ளிகளில் அதிநவீன வருகை பதிவேட்டு இயந்திரத்தை நிறுவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

  ஆய்வின்படி அதிநவீன வருகை பதிவேட்டு இயந்திரம் பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டியில் உள்ள பள்ளியில் பயன்படுத்தப்படுவது உறுதியாகி இருக்கிறது.

  வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

  இந்நிலையில், ஃபேஸ்புக்கில் வைரலாகும் வீடியோக்களில், "அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் டெல்லி பள்ளிகளை எவ்வாறு மாற்றியமைத்து இருக்கிறது என பாருங்கள். குழந்தைகள் பள்ளி வந்து பின் வருகை பதிவு செய்ததும், அவர்களது பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு விடும்" என கூறப்பட்டுள்ளது.

  இந்த பதிவுகளை உண்மையென நம்பி பலர் இவற்றை பகிர்ந்து வருகின்றனர். வைரலாகும் இந்த வீடியோ உண்மையில் ராவல்பிண்டி பள்ளி ஒன்றில் எடுக்கப்பட்டதாகும். இதே போன்ற வருகை பதிவேட்டு முறை ராவல்பிண்டி மட்டுமின்றி, இஸ்லாமாபாத் அருகே உள்ள பள்ளிகளிலும் நிறுவப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஜூலை 31-ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

  போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

  Next Story
  ×