என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஜிஎஸ்டி வரி
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு
By
மாலை மலர்27 July 2019 7:35 AM GMT (Updated: 27 July 2019 7:35 AM GMT)

டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் கூட்டம் டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்களின் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இது ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×