என் மலர்

  செய்திகள்

  வீரர்களை சந்திக்கும் மோடி
  X
  வீரர்களை சந்திக்கும் மோடி

  கார்கில் சென்று வீரர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாதது - பிரதமர் மோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்கில் வெற்றி தினமான இன்று, கார்கில் வீரர்களுடன் கலந்துரையாடிய சம்பவம் மறக்க முடியாதது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:
   
  காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999ல் பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். பாகிஸ்தான் படை மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தது. இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

  கார்கில் போரின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, கார்கில் போரின்போது ராணுவ வீரர்களை சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளார். 

  வீரர்களுடன் மோடி

  இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது கார்கில் சென்று நமது துணிச்சல்மிக்க வீரர்களை சந்தித்து ஒற்றுமையை காட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 

  அந்த சமயத்தில், நான் ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் கட்சிப் பணியில் ஈடுபட்டு இருந்தேன்.  கார்கில் சென்றதும், நமது வீரர்களுடன் கலந்துரையாடியதும் மறக்க முடியாதவை என பதிவிட்டுள்ளார். 
  Next Story
  ×