என் மலர்
செய்திகள்

சுயேட்சை எம்எல்ஏ ஆர்.சங்கர்
கர்நாடகாவில் மேலும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்
கர்நாடகா மாநிலத்தில் மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் தனது மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மந்திரிசபையில் சிறுதொழில் துறை மந்திரியாக இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ.நாகேஷ் தனது பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார்.
அவரை தொடர்ந்து 21 காங்கிரஸ் மந்திரிகள் தாமாக முன்வந்து தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்ததாக சித்தராமையா தெரிவித்தார். பின்னர், காங்கிரஸ் மந்திரிகளை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் ஆளும்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 மந்திரிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ.வான ஆர்.சங்கர் என்பவரும் தனது மந்திரி பதவியை இன்று மாலை ராஜினாமா செய்துள்ளார். மந்திரி பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மும்பையில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை சந்திப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரும் மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.
Next Story






