என் மலர்

  செய்திகள்

  சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்
  X
  சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்

  கண்ணீர் விட்டு அழுத சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் -காரணம்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகல் தொண்டர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுதார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக பூபேஷ் பாகல், கடந்த 2013ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து 6 ஆண்டுகளாக அப்பதவியில் செயல்பட்டு வந்தார்.

  சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

  சத்தீஸ்கர் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில், அம்மாநிலத்தின் முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.  எனவே, தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தன்னை விலக்குமாறு பூபேஷ்,  ராகுல் காந்தியிடம் கடிதம் அளித்தார்.

  இதனையடுத்து அவரை விலக்கிவிட்டு, காங்கிரஸ் கட்சி மோகன் மர்க்கத்தை, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தது. இது குறித்து நேற்று தொண்டர்கள் மத்தியில் பேசிய பூபேஷ் கூறியதாவது:

  ராகுல் காந்தியால் கட்சியின் மாநில தலைவராக கடந்த 2013ம் ஆண்டு நியமிக்கப்பட்டேன். தேர்தலில் தோல்வி அடைந்தபோதும் கட்சிக்காக, கடுமையாக உழைத்தோம். ஆனால், ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

  மூத்த தலைவர்களுடன் நடத்திய கடும் போராட்டத்துக்குப் பின் தொண்டர்களின் தொடர் முயற்சியால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. 6 ஆண்டுகளாக கட்சி தலைவராக இருந்து பணியாற்றிவிட்டு இப்போது விலகுவது வருத்தமாகதான் உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×