என் மலர்

  செய்திகள்

  பாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு- அத்வானியிடம் ஆசி பெற்றார்
  X

  பாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு- அத்வானியிடம் ஆசி பெற்றார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  

  இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்ற கட்சி தலைவராக மோடியின் பெயரை அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் முன்மொழிந்தனர்.  இதன்மூலம் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோடி, அத்வானியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

  இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில் பேசிய கூட்டணி கட்சி தலைவர்கள், மோடி பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதாக கூறினர். மேலும் மோடிக்கு அனைத்து தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். 
  Next Story
  ×