என் மலர்

  செய்திகள்

  மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பு டிவி-யில் ‘மன் கீ பாத்’: அகிலேஷ் கிண்டல்
  X

  மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பு டிவி-யில் ‘மன் கீ பாத்’: அகிலேஷ் கிண்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை பிரதமர் மோடி நேருக்குநேர் சந்தித்தது ‘மன் கீ பாத்’தின் கடைசி எபிசோடு போன்று இருந்தது என அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
  பாராளுமன்ற தேர்தலுக்கான கடைசி கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இத்துடன் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமும் ஓய்ந்தது. அதன்பின் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

  அவர் பிரதமராக பதவி ஏற்றபின் சந்திக்கும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இதுதான். கடைசி நேரத்திலாவது பத்திரிகையாளர்களை சந்தித்ததற்கு காங்கிரஸ் தலைவர் பாராட்டு தெரிவித்தார். ஆனால், அமித் ஷா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு என்பதால் கேள்விகளுக்கு பதில் அளிக்கமாட்டேன் என்று மோடி தெரிவித்தார்.  இந்நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘‘மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கீ பாத்’ என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்றுவார். அந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோடை டிவி மூலம் நிகழ்த்தியது போல் இருந்தது.

  பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முடியாமல் அமைதியாக இருக்கும் நிலையே ஏற்பட்டது. இது பாஜக-வின் பிரியாவிடைக்கான (Farewell) பத்திரிகையாளர் சந்திப்பு’’ என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×