என் மலர்
செய்திகள்

பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ponmanickavel
புதுடெல்லி:
சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து, ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 66 போலீசார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பொன்.மாணிக்கவேல் விளம்பர நோக்கில் செயல்பட்டு வருவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த மனு மீதான வாத பிரதிவாதங்கள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவல்துறை அதிகாரிகளின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #SupremeCourt #ponmanickavel
Next Story






