என் மலர்

  செய்திகள்

  ‘மன் கீ பாத்’ உரையாற்ற நான் இங்கு வரவில்லை- வயநாட்டில் ராகுல் பிரசாரம்
  X

  ‘மன் கீ பாத்’ உரையாற்ற நான் இங்கு வரவில்லை- வயநாட்டில் ராகுல் பிரசாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசியபோது, ‘மன் கீ பாத்' உரையாற்ற நான் இங்கு வரவில்லை என கூறியுள்ளார்.#Loksabhaelections2019 #RahulGandhi
  வயநாடு:

  கேரளா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை கேரளா மாநிலத்தின் வயநாடுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருநெல்லி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.  அதன்பின்னர் கோவிலில் செய்யப்படும்  சடங்குகளை செய்து முடித்தார்.   இதையடுத்து வயநாடு தொகுதியில்  நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர்  பேசியதாவது:

  நான் கேரளாவிற்கு ஒரு அரசியல்வாதியாக வரவில்லை. மற்ற அரசியல் தலைவர்களை போல் நான் என்ன நினைக்கிறேன், என்ன செய்யப்போகிறேன் என கூறப்போவதுமில்லை. என்னுடைய  ‘மன் கீ பாத்’  உரை ஆற்றவும் இங்கு வரவில்லை. உங்கள் இதயங்களில்,  எண்ணங்களில் என்ன உள்ளது என்பதை அறிவதற்காகவே  இங்கு வந்துள்ளேன்.

  நான் இந்நாட்டின் பிரதமர் போல் வருகை தந்து, உங்களிடம் பொய் உரைக்க வரவில்லை. ஏனென்றால் உங்கள் திறமை, அறிவுக்கூர்மை குறித்து நான் நன்கு அறிவேன். சில மாதங்கள் மட்டுமே உங்களுடன் உறவுகொள்ள வரவில்லை. இந்த உறவு காலம்தோறும் தொடர வேண்டும் என்றே விரும்பி வந்துள்ளேன். என்னால் உங்களை புரிந்து கொள்ள முடியும்.

  இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #RahulGandhi

  Next Story
  ×