search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலக்கோட் தாக்குதலால் பாதிக்கப்பட்டது காங்கிரஸ் தான் - பிரதமர் மோடி தாக்கு
    X

    பாலக்கோட் தாக்குதலால் பாதிக்கப்பட்டது காங்கிரஸ் தான் - பிரதமர் மோடி தாக்கு

    குஜராத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாலக்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிரானது. ஆனால் காங்கிரஸ் தான் பாதிப்புக்குள்ளானது என குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    ஜுனாகார்க்:

    குஜராத் மாநிலத்தில் ஏப்ரல் 23ம் தேதி  ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் குஜராத்  மாநிலத்தில் ஜுனாகார்க் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 4 நாட்களாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. ஏழைக் குழந்தைகளின் உணவுகளை பறித்து காங்கிரஸ்  தலைவர்களின் வயிற்றை நிரப்புகிறது. காங்கிரஸ் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.



    ஊழல் செய்து காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு அவபெயர்களை பெற்றுள்ளனர். ஆனால், நான் 5 ஆண்டுகளாக என்ன சாதனை செய்திருக்கிறேன் என்பதை கூறவே இங்கு வந்திருக்கிறேன்.  அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் என்ன செய்யவேண்டுமென்று கட்டளை இடுங்கள், செய்து முடிப்பேன்.

    உங்கள் மகன், இந்த காவலாளி செய்த செயல்கள் உங்களுக்கு பெருமையாக உள்ளதா? ஊழலே இல்லாமல் நான் நடத்திய 5 ஆண்டுகால ஆட்சி உங்களை பெருமை படுத்துகிறதா? . மேலும் உங்கள் மகனும், காவலாளியுமான என்னை அகராதியில் உள்ள அனைத்து அவதூறான வார்த்தைகளையும் கூறி காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர்.  

    பாலக்கோட்டில் நடத்திய தாக்குதல், பயங்கரவாதிகளை அழிக்கத்தான். ஆனால் அதனால் பாதிப்புக்குள்ளானது காங்கிரஸ் கட்சியினர் ஆவர். மேலும் ஜம்மு காஷ்மீரினை பிரித்து, அதற்கென தனி பிரதமரை உருவாக்கும் எண்ணத்துடனே தேசியவாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019   

    Next Story
    ×