என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்
    X

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்

    காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடன்கள் தள்ளுபடி, மீனவர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. #LokSabhaElections2019 #Rahul #CongressManifesto
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும். இலங்கையுடனான மீனவர் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படும்.



    ஒரே வரி விகிதத்தில் ஜிஎஸ்டி கொண்டு வரப்படும். 2 ஆண்டுக்குள் பெட்ரோல்-டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும். மதுபானம், புகையிலை மற்றும் ரியல் எஸ்டேட் துறையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும். அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

    விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும். மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள நிரப்பப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #LokSabhaElections2019 #Rahul #CongressManifesto
    Next Story
    ×