என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஏழைகளை வாக்கு வங்கிகளாக பயன்படுத்தின - மோடி குற்றச்சாட்டு
    X

    காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஏழைகளை வாக்கு வங்கிகளாக பயன்படுத்தின - மோடி குற்றச்சாட்டு

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சியினர் ஏழைகளை வாக்கு வங்கிகளாக கருதியதாக குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    காலஹந்தி:

    ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் காலஹந்தி பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழித்து, மத்தியிலே பாஜக ஆட்சியில் தான், ஒடிசாவில் 24 லட்சம் வீடுகளில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.  3000 கிராமப்பகுதிகளில் முதன் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டது. இவை யாவும் மோடியினால் தனியாக நடைபெற்றிடவில்லை. இந்தியாவில் வாக்காளர்கள் அனைவரும் இணைந்து செய்ய வைத்தார்கள்.

    காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் இந்தியாவை ஏழ்மையிலே வைக்க சதி தீட்டி, அதன்படியே ஆட்சியும் நடத்தி வந்தனர். மக்களை ஓட்டு வங்கிகளாகவே கருதினார்கள். தனா மஞ்சி போன்று இன்னும் எத்தனை பேர் அவசர வாகனமின்றி தவித்தார்களோ தெரியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019

    Next Story
    ×