என் மலர்

  செய்திகள்

  ராஜசேகர் ரெட்டி தம்பி கொலை- சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் புகார்
  X

  ராஜசேகர் ரெட்டி தம்பி கொலை- சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜசேகர் ரெட்டி தம்பி விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் புகார் தெரிவித்துள்ளார். #Jaganmohan #ChandrababuNaidu

  திருமலை:

  ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜ சேகர ரெட்டியின் தம்பி விவேகானந்த ரெட்டி (வயது 68). கடப்பா மாவட்டம் புலி வெந்துலாவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

  1989 மற்றும் 94-ம் ஆண்டில் புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று ஒருங்கிணைந்த ஆந்திராவில் வேளாண்மை துறை அமைச்சராக பணி புரிந்துள்ளார்.

  இவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் வசித்து வருகின்றனர். விவேகானந்த ரெட்டி அரசியல் சம்பந்தமான வி‌ஷயங்களுக்காக கடப்பா வந்து தங்கி செல்வார்.

  2 முறை கடப்பா எம்.பி.யாவும் பணிபுரிந்த விவேகானந்தரெட்டி தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் கட்சி பணிகளை அவரது அண்ணன் மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணைந்து மேற்கொண்டு வந்தார்.

  இந்நிலையில் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான புலிவெந்துலா வந்த விவேகானந்தரெட்டி இரவு பொதட்டூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

  நேற்று காலை விவேகானந்தரெட்டி தனது வீட்டு கழிவறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். விவேகானந்த ரெட்டி கழிவறையில் தலை மற்றும் காலில் வெட்டுப்பட்ட நிலையில் கிடந்தார்.

  விவேகானந்தரெட்டி உடலில் 7 இடங்களில் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

  அவரை கொலை செய்தவர்களை கண்டு பிடிக்க கடப்பா போலீசார் 5 சிறப்பு படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

  விவேகானந்த ரெட்டியின் உறவினர்கள், வீட்டு வேலைக்காரர்களிடம் முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.

  தனது சித்தப்பா விவேகானந்த ரெட்டி கொலை குறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:-

  என் சித்தப்பா ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி மரணத்தை மாநில போலீசார் திசை திருப்ப பார்க்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவின் கீழ் செயல்படும் போலீசார் விசாரணை செய்தால் உண்மை வெளிவரும் என்னும் நம்பிக்கை எனக்கு இல்லை. அவரை 7 முறை கொடூரமாக வெட்டி கொலை செய்திருக்கிறார்கள்.

  என் தாத்தா ராஜா ரெட்டி 1998-ல் இதேபோல படுகொலை செய்யப்பட்டார். என் தந்தை எதிர்க்கட்சி தலைவராக அப்போது தீவிர பிரசாரம் செய்து வந்தார். அவரை பிரசாரம் செய்ய விடக்கூடாது என்பதற்காகவே என் தாத்தாவை கொலை செய்து என் தந்தையை கடப்பாவிலேயே முடக்கி வைத்தனர். அப்போதும் சந்திரபாபு நாயுடுதான் முதல்வர்.

  அதன்பிறகு 2009-ல் இரண்டாம் முறை முதல்வரான எனது தந்தையை நீ எப்படி சட்டமன்றத்திற்கு வருவாய் என பார்க்கிறேன் என சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்திலேயே சவால் விட்டார். அடுத்த நாளே எனது தந்தை ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் விபத்தல்ல என்னும் சந்தேகம் எங்கள் மனதில் இன்றும் உள்ளது.

  இப்போது என் சித்தப்பாவின் படுகொலை இதைகூட சாதாரணமாக பார்க்கிறார்கள்.


  தேர்தல் வரும்போது தேர்தலில் தோற்கும் போதும் சந்திரபாபு நாயுடு என் குடும்பத்தினர் மீது இதுபோன்ற கொலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார். உண்மை வெளியே வரவேண்டும். மாநிலத்தில் எனக்கு நீதி கிடைக்காது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

  மேலும் எங்கள் கட்சி தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த சம்பவம் காரணமாக யாரும் எந்த அசம்பாவிதமும் ஏற்படுத்தாமல் பொறுமை காக்க வேண்டும். நான் கடவுளை நம்புகிறேன். நிச்சயம் நீதி கிடைக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார். #Jaganmohan #ChandrababuNaidu

  Next Story
  ×