என் மலர்
செய்திகள்

கும்பமேளாவில் 2 உலக சாதனைகளை நிகழ்த்திய உத்தரபிரதேச அரசு
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடைபெறும்போது, உத்தரபிரதேச மாநில அரசின் சார்பாக நடத்தப்பட்ட பேருந்து அணிவகுப்பு உலக கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. #GuinnessWorldRecord #UttarPradeshGovernment
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (பழைய பெயர் அலகாபாத்) நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழா நடைபெறும். இந்த கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் வருவார்கள். அதேபோல் இந்த ஆண்டு நடைபெறும் கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதேபோல் 8 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட நீண்ட சுவர் போன்ற அமைப்பில், மக்களின் கை அச்சுகள் பதிக்கப்பட்ட பதாகைக்காக, கும்பமேளா நிர்வாக அமைப்பு கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. #GuinnessWorldRecord #UttarPradeshGovernment

கும்பமேளா வரும் 4ம் தேதியுடன் நிறைவடைகிறது. நேற்று கும்பமேளா பதாகைகளை தாங்கி, 500 பேருந்துகள் வரிசையாக சாலையில் அணி வகுப்பு நடத்தின. இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழகம் மற்றும் கும்பமேளா நிர்வாக அமைப்பினர் செய்திருந்தனர்.

பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து அணிவகுப்பு 3.2 கிலோ மீட்டர் வரை நீண்டது. இது கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. இதற்கான கேடயமும் வழங்கப்பட்டுள்ளது.

Next Story