என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அபினந்தனை விடுவிப்பது எப்போது?- ஓரிரு நாளில் முடிவு எடுப்பதாக பாகிஸ்தான் சொல்கிறது
Byமாலை மலர்28 Feb 2019 9:06 AM GMT (Updated: 28 Feb 2019 9:06 AM GMT)
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் விடுவிக்கப்படுவாரா, இல்லையா? என்பது பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது. #Abhinandan #BringBackAbhinandan #PakForeignMinistry
புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அபினந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் பாகிஸ்தான் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அபினந்தன் விவகாரம் பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமரிடம் தொலைபேசியில் பேச தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, அபினந்தன் விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Abhinandan #BringBackAbhinandan #GenevaConvention #PakForeignMinistry

அபினந்தனை விடுவிப்பதற்காக இந்தியா ராஜாங்கரீதியாக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், அபினந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் பாகிஸ்தான் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அபினந்தன் விவகாரம் பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமரிடம் தொலைபேசியில் பேச தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, அபினந்தன் விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Abhinandan #BringBackAbhinandan #GenevaConvention #PakForeignMinistry
Next Story
×