search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதனப்பள்ளியில் கல்லூரி பேராசிரியர் விடுதியில் தற்கொலை
    X

    மதனப்பள்ளியில் கல்லூரி பேராசிரியர் விடுதியில் தற்கொலை

    மதனப்பள்ளியில் கல்லூரி பேராசிரியர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஐதராபாத்தை சேர்ந்த வீரதிம்மையா மகன் அனில்குமார் (வயது 32). இவருடைய மனைவி ரஜிதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அனில்குமார் கடந்த 18-ந் தேதி சித்தூர் அடுத்த குரபலகோட்டா அங்கல்லு அருகில் உள்ள ஒரு என்ஜினீரியங் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக வேலையில் சேர்ந்தார்.

    மதனப்பள்ளியில் பெத்த திப்பசமுத்திரம் சாலையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் கல்லூரிக்கு வராததால் உடன் பணிபுரிபவர்கள் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்காததால் விடுதி மேலாளரை தொடர்பு கொண்டு அனில்குமாரிடம் பேச வேண்டும் என்று கூறினர்.

    மேலாளர் சென்று அனில்குமார் தங்கியிருந்த அறையை தட்டினார். கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அனில்குமார் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மதனப்பள்ளி 2 டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து சென்று விடுதி அறை கதவை உடைத்து பிணத்தை மீட்டனர். 2 நாட்களுக்கு முன்னரே அனில்குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    போலீசார் அவருடைய செல்போனை ஆய்வு செய்தனர். அவர் கடைசியாக அவருடைய மனைவியிடம் பேசியது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அனில்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×