என் மலர்

  செய்திகள்

  ரெயில்வேயில் 1.3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப நாளை அறிவிப்பு வெளியாகிறது
  X

  ரெயில்வேயில் 1.3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப நாளை அறிவிப்பு வெளியாகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய ரெயில்வேயில் சுமார் 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. #IndianRailwaysVacancies
  புதுடெல்லி:

  பொதுமக்கள் தங்களின் வெளியூர் பயணத்துக்கு ரெயில்களையே தேர்வு செய்து வருகின்றனர். இதனால் அதிக தொழிலாளர்களை கொண்ட நிறுவனமாக இந்தியன் ரெயில்வே இயங்கி வருகிறது. அவ்வப்போது இந்தியன் ரெயில்வேயில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாவது வழக்கம்.

  இந்நிலையில், இந்தியன் ரெயில்வேயில் சுமார் 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக, ரெயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெயில்வேயின் பல்வேறு துறைகளில் உள்ள 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கு நாளை அறிவிப்பு வெளியாகிறது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 28ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். 
   
  ஜூனியர் கிளர்க், அக்கவுண்ட்ஸ் கிளர்க், டைப்பிஸ்ட், டிராபிக் அசிஸ்டெண்ட், கூட்ஸ் கார்ட், சீனியர் கிளர்க், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும்.

  மேலும், மார்ச் மாதத்திலும் தொடர்ந்து காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது என தெரிவித்துள்ளது. #IndianRailwaysVacancies
  Next Story
  ×