என் மலர்
செய்திகள்

ஜம்மு காஷ்மீர் - பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். #KulgamAvalanche
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ள போலீஸ் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் போலீசார் உள்பட 20 பேர் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் 10 போலீசாரை பத்திரமாக மீட்டனர். நேற்று நடைபெற்ற மீட்புப் பணியில் 5 போலீசார் மற்றும் 2 கைதிகளின் உடல்களை மீட்டனர். மேலும், 2 போலீசாரை உயிருடன் மீட்டனர். மாயமான ஒரு போலீசை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மீட்புப் பணியின்போது காணாமல் போன ஒரு போலீசின் உடலை மீட்டனர்.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். #KulgamAvalanche
Next Story






