என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலி
By
மாலை மலர்19 Jan 2019 9:06 AM GMT (Updated: 19 Jan 2019 9:06 AM GMT)

வாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போபால்:
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷாராணி (வயது56). இவர் உறவி னர்களுடன் சத்னா மாவட் டத்தில் இருந்து பன்னா நகருக்கு பஸ்சில் பயணம் செய்தார்.
அப்போது உஷா ராணிக்கு வாந்தி ஏற்பட்டது. பஸ் வேகமாக சென்று கொண்டு இருந்த நிலையில் அவர் பஸ் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வாந்தி எடுத்தார்.
அப்போது சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் தலை பலமாக மோதியது. பஸ் வேகமாக சென்று கொண்டு இருந்ததால் மோதிய வேகத்தில் தலை நசுங்கி துண்டானது.
இந்த சம்பவத்தை பார்த்த பஸ் பயணிகளும், சாலையில் சென்று கொண்டு இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து துண்டிக்கப்பட்ட தலை யையும், உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பஸ்சை படுவேகமாக ஓட்டியதாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
Next Story
×